தூத்துக்குடிக்கும் நெல்லைக்கும் இடையே கண்டக்டர் இல்லாத பஸ்களை இயக்குகிறார்கள். இந்த பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஏறும் கண்டக்டர்கள் கே டி சி நகர் நிறுத்தம் வரை சென்று டிக்கெட் வசூலித்து விட்டு அங்கிருந்து இறங்கி திரும்ப வருவார்கள்.
இன்று இரவு 10 .50 மணியளவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி புறப்பட்ட பாயிண்ட்–பாயின்ட் பேருந்தில் ஏறிய கண்டக்டர், ‘ நான் பாளை பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி விடுவேன் .எனவே, அதற்கு அடுத்த நிறுத்தங்களில் நிற்பவர்களை ஏற்ற முடியாது’ என்று சொல்லி, சமாதானபுரம், கே டி சி நகர் போன்ற இடைப்பட்ட நிறுத்தத்தில் இறங்க வேண்டிய அனைத்து பயணிகளையும் பாளை.பஸ் நிறுத்தத்திலேயே இறக்கி விட்டுவிட்டார்
மேலும் ,சமாதானபுரம் கோர்ட் கேடிசி நகர் போன்ற இடங்களில் பஸ்க்காக நிற்பவர்களைஏற்றாமல் 15 பேரை வைத்துக் கொண்டு பஸ் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது. உடனடியாக கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.








