தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு 2907 மதுபாட்டில்களும், பணம் ரூபாய் 6,700 பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 1872 மதுபாட்டில்களையும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பேரைக் கைது செய்து 885 மதுபாட்டில்களையும் தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி மேற்கு, எட்டயாபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் 11 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.














