புனித ஜெர்மேனம்மாள் திருவிழா கொடியேற்றம்

0
303

மதுரை அருகே, ராயபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 400 ஆண்டு பழமை வாய்ந்த புனித ஜெர்மேனம்மாள் 110ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்றனர்.


தொடர்ந்து, புனித ஜெர்மேனம்மால் நகரின் நான்கு வீதிகளில் வலம் வந்தார்.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினத்திற்கு அடுத்த வெள்ளி இரவு கொடியேற்றம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் புனித ஜெர்மேனம்மாள் சப்பரத் திருவிழாவும் இரவு பூப்பல்லக்கு திருவிழாவும் நடைபெறும்


திருவிழாவில், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் வந்து இரவு முழுவதும் தங்கி திருவிழாவில் பங்கேற்பது காலம் தொட்டு நடைபெறும் நிகழ்வாகும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here