குழந்தைகள் மற்றும் சிறார்கள் குறித்த தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி யூடியூப் சேனல் திரட்டியதான குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனம் 170 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ.1200 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
13 வயதுக்கும் குறைவான சிறார்களின் தகவல்களை திரட்டுவது என்பது அமெரிக்காவில் சட்ட விரோதமானது. 1998-ம் ஆண்டு இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. 2013-ல் குக்கீகளையும் சேர்க்க இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
பெற்றோர் அனுமதியின்றி சட்ட விரோதமாக யூ டியூப் செனல் திரட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியன் ஏற்கெனவே பயனாளர்களின் தனியுரிமைக் கொள்கைகளை மீறி தரவுகளைத் திரட்டி இந்தத் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அளித்ததான புகாரை கூகுள் சந்தித்து வருகிறது.