பஸ் பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட மனிபர்ஸ் மற்றும் அங்கிருந்து 7 ஆயிரத்துடன் அருகிலுள்ள பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் முறையாக ஒப்படைத்துள்ளார். காவல் ஆய்வாளர் ஹரிஹரன்,
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தியம் உங்களை காத்து நிற்கும் ‘
என்று இனிமையான பாடல் பாடி வாழ்த்தினார்.
உதவி ஆணையர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மாணவனை வாழ்த்தி பாடிய அந்த வீடியோ
தற்போது வைரலாகி வருகிறது.
ஆய்வாளர் ஹரிஹரன் தூத்துக்குடி தென்பாக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர்
தற்போது பாளையங்கோட்டை பெருமாள் புரம் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் பாடல் காணொளி கீழே :









