15 நாட்களுக்கு 144 தடை… 92 டாஸ்மாக் கடைகள் மூடல்… நெல்லை ஆட்சியர்

0
1423

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நெல்கட்டும் சேவல்பாளையத்தை ஆட்சி செய்தவர் மாமன்னர் பூலித்தேவன். இவரது ஜெயந்தி விழா வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.

பூலித்தேவனின் படைத் தளபதிகளில் ஒருவர் ஒண்டிவீரன். இவரது நினைவு தினம் பாளையம் அருகே பச்சேரியில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இவர்களது சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் கலந்து கொண்டு மாமன்னர் மற்றும் படைத் தளபதிக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுடன் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு, நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும், வழியோரங்களில் அமைந்துள்ள 92 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here