திண்டுக்கல் மாநகராட்சி 18 ஆவது வார்டு வேட்பு மனு பரிசீலனையில் திமுக வேட்பாளர் முகமது சித்திக் வேட்புமனுவில் குறைபாடு இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் தீப்பெட்டி ராஜா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தன்னை போலீசார் முன்னிலையிலேயே திமுக வேட்பாளர் மிரட்டியதாக அவர் கூறினார்.

வேட்புமனு குளறுபடி காரணமாக தீப்பெட்டி ராஜா மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அந்த பொறாமையில் குற்றஞ்சாட்டுவதாக முகமது சித்திக் கூறினார்.
தன்னிடம் பணம் கேட்டு தான் கொடுக்காததால் குற்றம்சாட்டுவதாகவும் பகிரங்கமாக சொன்னார்.இதனால் அங்கு பலத்த கூச்சல், குழப்பம் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் முகமது சித்திக் மனு ஏற்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.













