அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தது . சமூக சேவகர்அருள்ராஜ். சமீபத்தில் அதிகாலை அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தில் . சென்றபோது, அருகே இருந்தவர்கள் அதிக சத்தத்துடன் செல்போனில் பாட்டு கேட்டும் காணொளி பார்த்தும் அதிகாலை அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர்.
இதனால் அவர் நடத்துநரிடம் முறையிட்டார். அவரோ , ‘நான் ஒன்றும் செய்ய முடியாது நீ வேண்டுமானால் வேறு வண்டியில் போ’ என கோபப்பட்டுள்ளார். இதனால் வேறு வழி என்று வேறு பேருந்தில் ஏறி நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து நம் தென்நாடு இணைய இதழில் செய்தி வெளியானது. உடன் பயணிப்பவரை தொந்தரவு செய்யும் வகையில் ஒலி மாசு ஏற்படுத்துவதையும், அதை தடுக்க வேண்டிய நடத்தினர் கடமை தவறியதையும் சுட்டி காட்டி இருந்தோம்.
அதன் எதிரொலியாக
பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தெரிவித்தார். மேலும், இது பற்றி
ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகவும் வாக்குறுதி. அளித்துள்ளார்.














