கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்களாக நியமித்திருப்பது சரியல்ல. அதனை நீக்கி குற்றப் பின்னணி இல்லாத தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என்று கோரி கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கால் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 13ஆம்தேதிக்கு தள்ளிவைத்தார்.
அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன் ஆஜரானார்.















