ஆட்டோ கவிழ்ந்து நர்ஸ் பலி

0
1206

தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த குட்டி என்ற மாரிமுத்து மனைவி தன பாலசுந்தரி(38). தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.
இன்று நண்பகல் 12மணிக்கு புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு தனது மாமனார் ஜெயபால் (66) ஆட்டோவில் வந்துள்ளார். சொக்கம் பட்டி அருகேயுள்ள தனியார் மில் பகுதியில் ஆட்டோ வந்த போது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ டிரைவர் சுப்புராஜ்(32) பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த தனபாலசுந்தரி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் சுப்புராஜ் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதியவர் ஜெயபால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here