புவனேஷ்வரில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி:
சந்திரயான்-2 திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என 2 வகையாக செயல்படுத்தப்பட்டது. அறிவியல் என்ற நோக்கத்தில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம்.
2-வதாக தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டோம். இதன் காரணமாகவே சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றியை பெற்றுள்ளது என்று நாங்கள் கூறுகிறோம்.
விக்ரம் லேண்டரில் இருந்து தகவல்களை ஏன் பெற முடியவில்லை எங்கு தவறு நேர்ந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகி்ன்றனர்.
எங்களின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டம். இந்தத் திட்டத்தின் இலக்குகளை அடுத்த ஆண்டுக்குள் அடைய நாங்கள் முயற்சி செய்வோம்.














