தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா ஏழாம் நாளை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிகப்பு சாத்தி கோலத்தில் திருவீதி உலா வந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் சிவப்பு சாத்தி தினத்தன்று திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிவப்பு ஆடை அணிந்து முருகனை வழிபட்டனர்.









