தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டானுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 54ஏ இயங்கியது. வழியிலுள்ள 5 கிராம மக்கள் பயன்பெற்றனர். மினி பஸ் இயக்கத்துக்கு பின் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது மினி பஸ் வசதி இருந்தாலும், பள்ளி, அலுவலக நேரமாகிய காலை, மாலை வேளைகளில் நெருக்கடியாக பயணம் செய்யவேண்டியிருப்பதாக கக்கன் நகர் திமுக பிரமுகர் லிங்கம் கூறுகிறார்.
மீண்டும் அரசு பஸ்சை இயக்கினால், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் ஏழை பெண்கள் இலவசமாக பயணம் செய்யவும்,மாணவர்கள் நெருக்கடியின்றி, பாஸ் மூலம் பயணிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.








