திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலை மூன்றடைப்பில் தற்போது கார் ஒன்று பைக்மீது மோதியதில் பைக்கை ஓட்டி வந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.

அடைமிதிப்பான் குளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜ செல்வன் (50). மூன்றடைப்பில் பைக்கில் நின்றவர் திடீரென்று குறுக்காக திரும்ப, பின்னால் சுசீந்திரத்திலிருந்து பாலாஜி என்பவர் ஓட்டி வந்த கார் பைக்கில் மோதியது. இதில் ராஜ செல்வன் அதே இடத்தில் பலியானார். பெட்ரோல் டேங்க் உடைந்து பைக் தீப்பற்றி பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து தொழிலாளியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








