தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் என 3 தாலுகாக்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பெரியதாழை, வாக்கு வங்கி அதிகம் உள்ள ஒரு மீனவ கிராமம். இதனால் இந்த ஊரின் மீது அனைத்துக் கட்சியினரும் ஒரு கண் வைத்திருப்பது வழக்கம்.
இந்த சூழலில் பெரியதாழை மீனவர் ரீமிட்டன் என்பவரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் ஆனது . இதைக் கேள்விப்பட்டதும் இன்று காலை சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் மீனவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய பாஜகவினர், அரிசி, போர்வை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.
இதை அறிந்த அதிமுகவினர், மாலையில் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நிதி மற்றும் ஆடைகள் வழங்கினர்
இவ்வளவு நடந்த பின்னும் ஆளுங்கட்சியினரான திமுகவினரோ, எம் எல் ஏ வின் காங்கிரஸ் கட்சியினரோ இதுவரை நிவாரணம் வழங்க வரவில்லை என்று ஊர்காளர்கள் ஊர்க்காரர்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டனர்.









