திருச்செந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால், சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றின் பின்புறமிருந்து சானிடைசரை குடித்தவர், வயிற்றுவலியால் துடித்துள்ளார். உடனே தனது சகோதரருக்கு தன் நிலையை கைபேசி மூலம் கூறியுள்ளார். அவர் வந்து பார்த்தபோது மூர்த்தி இறந்து கிடந்துள்ளார்.
இதேபோல், திருச்செந்தூரில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த தென்காசி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜும் அங்குள்ள டாஸ்மாக் அக்டை அருகே சானிடைசர் குடித்து இறந்து கிடந்துள்ளார். திருச்செந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.