காமராஜர் 45ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். புதுவையில் முதல்வர் நாராயணசாமி நினைவஞ்சலி செலுத்தினார். உருவ சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆனால் டெல்லியில் அமைந்துள்ள காமராஜர் சிலை அவரது நினைவு நாளில்கூட கவனிப்பாரற்று இருந்தது. மாலை அணிவித்து மரியாதை செலுத்த, காங்கிரஸ் தொண்டர் ஒருவர்கூட முன்வரவில்லை.
அகில இந்திய தலைவராக இருந்தாலும், பிற மாநிலங்களில் நினைவுநாள் பேரளவில் அனுசரிக்கப்படவில்லை. குறிப்பாக டெல்லியில் அறவே நினைவு நிகழ்ச்சி இல்லை.