தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த மாயவன் என்பவர் தற்போது காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கருங்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் காவல் துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.









