தமிழ்நாட்டில் முதல்வர் மற்றும் அமைச்சரவையை மீறி சில வேளைகளில் கவர்னர் நடவடிக்கை அமைகிறது. கடந்த காலங்களில் கவர்னர் ஊர்தோறும் சென்று குறைகேட்டது நினைவிருக்கும்.
இப்போது புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடத்த கவர்னர் அலுவலகம் ஏற்பாடு செய்கிறது. இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்த கலந்தாய்வு கூட்டத்தை கவர்னர் செயலர் நடத்தப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று உயர்கல்வி துறை அமைச்சர் கையை விரித்தார். ஆனாலும், கூட்ட ஏற்பாடு நடந்தது. கூட்டத்துக்கு அழகாக ஆடை உடுத்தி வாருங்கள் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கூட அறிக்கையிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.











