பேய்க்குளம் பகுதியில் நூதன முறையில் திருட்டு..!

0
381

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலைபுதூரை சேர்ந்தவர் கோயில்ராஜ் . இவர் பேய்க்குளம் கோமானேரி சாலையில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 29ஆம் தேதி காலை கடையை திறந்ததும் பைக்கில் வந்த டிப்டாப் நபர், கடைக்கு வந்து அவரிடம் டிபன் பாக்ஸ் கேட்டுள்ளார்.

அவர் டிபன் பாக்ஸை எடுக்க முயன்றபோது அவர் அறியாத நேரத்தில் டிப் டாப் ஆசாமி, பணம் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து விட்டு பைக்கில் தலைமறைவாகி விட்டாராம்.
கோயில்ராஜ் டிபன் பாக்ஸை எடுத்து டிப்டாப் ஆசாமியை தேடியபோது பணப்பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here