மதுரையில் பழையவார்டு 17, புதிய வார்டு 60, கடைசி பஸ்டாப் எல்லீஸ்நகர் கிருல்மா நதி நிறம்பிவிட்டது. தெருக்களில் தண்ணீர் ஓடி வீட்டிற்குள் செல்லும் அபாயம் உள்ளது.
வண்டியூர் சௌராஷ்டிராபுரம் 5ஆவது தெருவில் மழை நீர் தேங்கி, கொசுத் தொல்லை பெருகி வருகிறது.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கருப்பாயூரணி, ஒடைப்பட்டி, ஒத்தப்பட்டி, திடியனூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழையால், கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்தது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால், மதுரை சிவகங்கை சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
பல கிராமங்களில், மழைநீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளில் உள்ளே புகுந்துள்ளது.
கருப்பாயூரணியில் பகுதிகளில், உள்ள வீடுகளில் சூழ்ந்த மழைநீரை அகற்ற வலியூறுத்தி கிராம மக்கள், மதுரை- சிவகங்கை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை- சிவகங்கை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.