ஜி 7 கூட்டத்தில் அமேசான் காட்டுத்தீ பற்றி ஆலோசனை

0
1234

அமேசான் காட்டுத்தீ அணையாமல் வாரக்கணக்கில் எரிந்துகொண்டிருக்கிறது. பிரேசிலை தாண்டி வெனிசுலா, பொலிவியா, பராகுவே நாடுகளையும் தீ அணைத்துக்கொண்டுள்ளது. இந்த தீ விபத்து தொண்டு நிறுவனத்தார் ஏற்படுத்திய விபத்து. நன்கொடைகளை தடை செய்ததால் அவர்கள் இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளனர் என பிரேசில் அதிபர் கூறினார். அதை தொண்டு நிறுவனத்தவர்கள் மறுத்தனர்.
இந்நிலையில், பிரான்சில் நடக்கும் ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் இந்த தீ விபத்து விவாதப்பொருளாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் கூறினார். அமேசான் தீ விபத்தால் 228 மெகா டன் அளவுக்கு கரியமில வாயு எழுந்துள்ள நிலையில் இதை உலக பேரிடர் என பிரான்ஸ் அதிபர் வருணித்தார். பிரேசிலில் 4 மாகாணங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தையும், பொலிவியாவில் 11 லட்சம் ஏக்கர் நிலத்தையும் தீ கருக்கிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here