கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் ஜாலி பேர்வழி. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது போதையில் வாக்கு கேட்க போய் தடுமாறியதாக பரபரப்பு தகவல் வெளிவந்தது. ஆனாலும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.
இன்று தேர்தல் முடிந்து வெற்றி விழா ஊர்வலம் நடந்த போது, தொண்டர் கூட்டத்தின் நடுவே வாகனத்தில் வந்தவர், அவ்வப்போது தொண்டர்களை நோக்கி,,’ ஃபுல் இருக்குது ஆபிசுக்கு போங்கடா…’ என்று கைகளால் சைகை காட்டியவாறே சென்றதோடு, உற்சாக மிகுதியால் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை அந்த பக்கமும் இந்த பக்கமும் தொண்டர்களை நோக்கி வீசினார்.

டி கே சிவகுமாரின் ஆரம்ப அணுகுமுறையே தொண்டர்களுக்கு குஜாலாக இருந்தது.