ஆணாக மாறிய ஐஆர்எஸ் பெண் அதிகாரிக்கு அரசு அங்கீகாரம்

0
1207

இப்போதெல்லாம் பாலின மாற்றம் இயல்பானது என்ற அறிவு யாவருக்கும் ஏற்பட்டுவிட்டது. உடல் மற்றும் மனம் சார்ந்த இந்த பிரச்சனையால் பாலின மாற்றம் தனக்குள் நிகழ்ந்தாலும் வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டும் அச்சப்பட்டும் பலர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சமூகத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

அண்மையில், ஹைதராபாத்தில் அமைந்துள்ள ‘செஸ்ஸ்டாட் ‘ முதன்மை கமிஷனர் ஆக பொறுப்பேற்றுள்ள ஐஆர்எஸ் அதிகாரி
அனுசுயா தேவி தனது பாலினத்தை மாற்றி அனு கதிர் சூர்யாவாகியுள்ளார.

இது குறித்து ‘ ஃபின்மின் இந்தியா’ அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஐ ஆர் எஸ், ஐ ஏ எஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ் மட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பாலின மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here