தெலங்கானா: சம்பளம் வழங்காததால் பேருந்து நடத்துநர் தற்கொலை

0
1035

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் கவுடா (53). இவர் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். போக்குவரத்துக் கழகத்தை அரசு நிறுவனம் ஆக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5ஆம்தேதி முதல் அங்கு நடைபெறும் பேருந்து கழக ஊழியர்கள் போராட்டத்தையடுத்து அதில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் சம்பளமும் வழங்கவில்லை.
இதனால் இதுவரை 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். அதில் சுதர்சன் கவுடா இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here