மதுரை காமராஜர் பல்கலைக்
கழகத்தில் 600க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 245 பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முதல் இன்று 2வது நாளாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி சங்க செயலாளர் பார்த்த சாரதி உட்பட பல்கலைக் கழக பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.














