அருவி வெள்ளத்தில் அடித்துச் சென்ற மானை மீட்ட வனத்துறை

0
369

கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மானை அச்சன்கோவில் வனத்துறை பணியாளர்கள் துணிச்சலுடன் மீட்டனர்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெய்த கனமழையின் காரணமாக கும்பவுருட்டி நீர்வீழ்ச்சியில் அதிகப்படியான நீர்வரத்து காணப்பட்டது, இதில் அடித்து வரப்பட்ட மரக் கிளைகள் கற்கள் போன்றவற்றை வனத்துறை ஊழியர்கள் அகற்றிக் கொண்டிருந்தபோது அருவியின் உச்சியிலிருந்து ஒரு உயிரினம் வனத்துறை பணியாளர்கள் மீது விழுந்தது.

முதலில், பணியாளர்கள் அது ஒரு பாம்பு என்று நினைத்தனர், ஆனால் அதன் தலையைப் பார்த்தபோது, ​​அது ஒரு மான் என்பதை உணர்ந்தனர். பின்னர், கேரள தீயணைப்புப் படை குடிமைப் பாதுகாப்புப் பயிற்சி பெற்ற மற்றும் தற்காலிக வழிகாட்டிகளான மணிகண்டன், சுகு, சினோஜ், ராஜேஷ், மணி, ரோசம்மா போன்றோரின் தலைமையில், அவர்கள் காயமடைந்த மானை வெள்ளத்தில் இருந்து மீட்டு தங்களிடம் இருந்த துணியில் சுற்றி கரைக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து நீர்வீழ்ச்சியின் மறுபுறம் காட்டில் மான் விடப்ப்படது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here