நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பல்கலை வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்றது , விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சுமார் ரூ.9 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வாழ்த்தி பேச சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் இந்த ஆண்டு ஆராய்ச்சி கட்டுரைக்காக விசிக தலைவர் தொல். திருமாவளவன் உட்பட நேரடியாக 753 பேருக்கு விழா மேடையில் பட்டம் வழங்கப்பட்டது
இதில், 650 பேர் பி.எச்.டி. பட்டமும் 103 பேர் தரவரிசை பட்டியலில் இடமும் பெற்றுவர்கள் மொத்தம் 48 ஆயிரத்து 400 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா, விஜிலா சத்தியானந்த் எம்.பி.,மாவட்ட எஸ்பி., அருண் சக்திகுமார் , துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









