நேற்று சிறையில் நடந்த கைதிகளின் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும் பிலால் மாலிக்கும் பங்கேற்கவில்லை. பங்கேற்காததற்கான காரணம் கேட்கப் போன சிறைத்துறை எஸ்.பி. செந்தில்குமாரிடம் பன்னா இஸ்மாயில் வாக்குவாதம் செய்து உள்ளார். வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட சிறையில் பதற்றம் நிலவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பன்னா இஸ்மாயில் தன்னை தாக்கியதாக சிறைத்துறை எஸ்.பி. செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பன்னா இஸ்மாயில் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.












