“எஸ்கே 16” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இன்று ( திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் அனு இமானுவேல் ஜோடி சேருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் சூரி ஆகியோருடன் தற்போது இயக்குனர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.