திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தரை காடுகள் அதிகளவில் உள்ளது அதில் உள்ள வனவிலங்குகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் கள்ள துப்பாக்கியுடன் சுற்றி திரிவதாக வந்த தகவலை அறிந்த செங்கம் வனத்துறையினர் விரைந்து சென்றபோது திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் சரண்ராஜ் பி.எல்.தண்டா பகுதியை சேர்ந்த பழனி என்ற மூன்று இளைஞர்களை கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இளைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வனத்துறையினர் வசூலித்தனர்.