திருவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் உள்ள மல்லி பகுதியில், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சண்முகவேல் பாண்டியன் தலைமையில் அதிமுக கட்சியினர் திரண்டுவந்து, ‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க’, கட்சியை அழிக்கத்துடிக்கும் எடப்பாடி ஒழிக’ என்று கோஷமிட்ட அதிமுக கட்சியினர், திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி படம் ஒட்டப்பட்டிருந்த உருவ பொம்மையை இழுத்துவந்து, சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அந்தப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக மல்லி காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று அதிமுக கட்சியினரை அங்கிருந்து போகச் செய்தனர்.