ஆப்கனில் தலீபான் தாக்குதலில் 14 பேர் பலி

0
1217

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெரத் மாகாணத்தில் ரோபட் சங்க் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில், உள்ள சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அரசுக்கு ஆதரவு படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தலீபான் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here