கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்கு

0
738



கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் . மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் 800 பெண்கள் உட்பட 900 நபர்கள் மீது கடையநல்லூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப் பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here