பாம்பு கடித்து 3 பக்தர்கள் சாவு

0
1450

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் இருந்து ஜெய்சால்மர் பகுதியில் உள்ள ராம் தேவரா கிராமத்திற்கு 3 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் செல்லும் வழியில் மோதிகார் என்ற இடத்தில் கோவில் ஒன்றின் அருகே நேற்றிரவு ஓய்வெடுக்க முடிவு செய்து அங்கு தங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் 3 பேரையும் பாம்பொன்று கடித்துள்ளது. இதனால் உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை 3 பேரும் உயிரிழந்தனர்.

அவர்கள் ராஜுராம், சன்னிலால் மற்றும் அவரது மனைவி ரதி தேவி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுபற்றி பிரிவு 174ன் கீழ் போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here