மோடி _ மம்தா: இனிப்புடன் ஓர் இனிய சந்திப்பு

0
1310

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மோடியை சந்தித்த போது, இனிப்புகளையும், குர்தாவையும் மம்தா பானர்ஜி பரிசாக வழங்கினார்.

மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் அரசியல் ரீதியாக கடுமையாக மம்தா பானர்ஜி சமீப காலமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

சாரதா சிட்பண்ட் வழக்கு சூடு பிடித்த நிலையில் சமாதான்த்துக்கான சந்திப்பாக இது பேசப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here