தமிழக, கேரள நதிநீர் திட்டம்: அதிகாரிகள் குழு அமைப்பு

0
1372

கடந்த தமிழக, கேரள முதல்வர்கள் இரு மாநில அரசு நதிநீர் சிக்கல்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நிலுவையில் இருக்கும் நதிநீர் திட்டங்களை ஆய்வு செய்ய இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டத்தை ஆய்வுசெய்ய ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன் முனவர் சுல்தானா ஆகியோர் அடங்கிய குழுவும், பாண்டியாறு _ புன்னம்புழாவுக்கு மணிவாசன் தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சுப்பிரமணியன், தமிழரசன், முத்துசாமி, முனவர் சுல்தானா ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் ஆனையாறு, நீராறு, ஆழியாறு, பாலாறு உள்ளிட்டவை இணைக்கப்படும். பாண்டியாறு திட்டத்தால் பவானியாற்றுக்கு 7 டிஎம்சி நீர் கிடைக்க வகை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here