தபால் நிலையமா, காவல் நிலையமா? பெயர் பலகை இல்லாத போலீஸ் ஸ்டேஷன் குழப்பம்

0
267

தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலையத்தில் பெயர் பலகையே இல்லை. ஒருவேளை ரகசிய விசாரணை நடத்துகின்ற இடமாக இருக்குமோ? அதனால் பெயர் பலகை முகவரி எதுவும் வைக்கப்படவில்லையோ? என்று புதியவர்கள் குழம்புகின்றனர்

நேர்பலகை இல்லாததனால்,திடீரென பார்க்கும்போது தபால் நிலையம் போன்ற தோற்றத்தை தருகிறது. நிலைய மேல் புறத்தில் நகர்புற வாழ்வாதார இயக்கம் என்பது போன்ற அறிவிப்பு மட்டுமே காணப்படுகிறது. சாலை நடுவே வைக்கும் தடுப்பு பலகைகளுக்கு கூட ஸ்பான்சர் ஷிப் பிடிக்கின்ற காவல்துறையினர், அவ்வாறான முயற்சியிலாவது பெயர்ப்பலகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்த காவல் நிலைய முகப்பு பகுதியில் நீதிமன்ற அறிவுத்தலின்படி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படவில்லை . முக்கியமான விசாரணைகளின் போது வழக்கமாக சிசிடிவி வேலை செய்வதில்லை என்பதனால் அறிவிப்பை தவிர்த்து இருக்கலாம் என தோன்றுகிறது

அனைத்துக்கும் மேலாக , இந்த காவல் நிலையத்தில் மட்டுமின்றி,தூத்துக்குடியின் நகரில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்திலுமே புகார் அளிக்க வருபவர்களுக்கு குடிநீர் கழிப்பறை வசதி இல்லை என்பதை முக்கிய குறைபாடாக மாநகர வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here