தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (12ஆம்தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை TAC நகர் மெயின் வார்டு:59, திரவியபுரம் மெயின் சர்ச் வார்டு:11, வடக்கு பிள்ளையார் கோவில் மெயின் வார்டு:23, சக்தி நகர் மெயின் வார்டு:48, லெவிஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளி வார்டு:47 ஆகிய பகுதிகளிலும், காலை 11.30 மணிமுதல் 1.15 மணி வரை குமாரசாமி நகர் 3வது தெரு வார்டு:55, கிருஷ்ணராஜபுரம் 1வது தெரு கோவில் அருகில் வார்டு:10, தச்சர் தெரு மெயின் வார்டு:16, சாந்தி நகர் மெயின் வார்டு:48, தாமோதரநகர், ஜிம் தெரு மெயின் வார்டு:45 ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை அத்திமரப்பட்டி சர்ச் வார்டு:56, முத்தம்மாள் காலனி பார்க் வார்டு:5, முனியசாமி கோவில் தெரு மெயின் வார்டு:14, குருவிமேடு, பாரதிநகர் மெயின் வார்டு: 48, பிரையண்ட்நகர் 7வது தெரு கிழக்கு TDTA பள்ளிவார்டு:43 ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வ.உ.சி நகர் பகுதியிலும், காலை 11.30 மணிமுதல் 1.15 மணி வரை பாரதி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை அண்ணாநகர் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை பிரசாந் நகர் பகுதியிலும், காலை 11.30 மணிமுதல் 1.15 மணி வரை வீரபாண்டியன்பட்டிணம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வீரசடச்சியம்மன் கோவில் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை கே.புதூர், கொற்கை, கலியாவூர், ஆழ்வார்கற்குளம், வெயில்கந்தம்மன் கோவில் தெரு, திருக்க@ர், தெற்கு தெரு-மூக்குப்பேறி, சீர்காட்சி, கல்லாமொழி, பொத்தகாலன்விளை-முதலூர், படுக்கப்பத்து, ஜமீன் தேவர்குளம், தலையாள்நடந்தான்குளம், ஜெகவீராபுரம், பாறைக்குட்டம், அயன் வடமலாபுரம் ஆகிய பகுதிகளிலும், 11.30 மணிமுதல் 1.15 மணி வரை வடக்கு சிலுக்கன்பட்டி, கொடுங்கனி, விளாத்திகுளம், ஆறாம்பண்ணை, அரபாத்நகர், சண்முகபுரம், சேதுக்குவாய்த்தான், வடக்கு ரதவீதி-ஆழ்வார்திருநகரி, வடக்கு காளான்குடியிருப்பு, தாண்டவன்காடு, தேரிபண்ணை (ஆனந்தபுரம்), பெரியதாழை, மூப்பன்பட்டி, கம்மாபட்டி, ஏ.வேலாயுதபுரம், பாண்டியாபுரம், அச்சங்குளம் ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணிமுதல் 4 மணி வரை குறிஞ்சி நகர், கோரம்பள்ளம், கொற்கை, மணலூர், பறைக்காடு, மணக்கரை, ஆறுமுகபுரம், குரங்கனி, அகிலாண்டம்மன் கோவில் தெரு-ஆழ்வார்திருநகரி, மருதூர்கரை, உதிரமாடன்குடியிருப்பு, அச்சம்பாடு-ஆனந்தபுரம், உசரத்துகுடியிருப்பு- படுக்கப்பத்து, கிருஷ்ணா நகர் (கோவில்பட்டி), கயத்தார் காந்தாரியம்மன் கோவில் தெரு, வெள்ளையம்மாள்புரம், கொம்பாடி, தப்பாத்தி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசியிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தகவல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.









