தாளாளர் பாலியல் டார்ச்சர்: திண்டுக்கல் நர்சிங் கல்லூரியை அரசு ஏற்க மாணவிகள் கோரிக்கை

0
949

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் அமமுக பிரமுகர் ஜோதி முருகனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜோதிமுருகன் இங்கு கல்வி பயிலும் மாணவிகளிடம் பாலியல் டார்ச்சர் செய்ததாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதி முருகனை தேடி வந்தனர். தாளாளரின் பாலியல் சீண்டல்களுக்கு உடந்தையாக இருந்த கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைதுசெய்தனர் . இதற்கிடையே ஜோதி முருகன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் நர்சிங் கல்லூரி மாணவியர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், ‘ பாதிக்கப்பட்ட மாணவியை நாங்கள் சந்திக்கவேண்டும். இந்த கல்லூரியை அரசு ஏற்று நடத்தவேண்டும். பலருக்கும் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது. உடனடியாக வழங்கவேண்டும்’ என்று பேட்டியளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here