பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1330 பேர் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு நோட் புக் தயாரிப்பு, பைண்டிங் உள்ளிட்ட பணிகளுடன் கூடுதலாக அவர்களது வருவாய்க்காக தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, சிறை வளாகத்துக்குள் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தையும் சிறைவாசிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் தோட்ட வேலைக்கு நன்னடத்தை சிறைவாசிகள் அனுப்பட்டனர். அவர்களில் கன்னியாக்குமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர்சிறைவளாகத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.
இவர் 2006-ம் ஆண்டு அஞ்சுகிராமம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யபட்டு 2019ம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக சிறையில் நடக்கும் பல்வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தான் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.















