கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்து உள்ளது காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கோயில் ஊழியர் இந்த தோலைக் கண்டு உள்ளார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் இது கிடந்து உள்ளது.
இங்குள்ள கிராமவாசிகள் அந்த பாம்பு தோலை ஏழு தலை பாம்பின் தோல் என்று நம்புகிறார்கள். அங்கு எழு தலை பாம்பு இருப்பதாகவும் நம்புகிறார்கள். நேற்றில் இருந்து அங்கு கூட்டம் கூட்டமாக கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ஏழுதலையுடைய ‘புராண’ பாம்பு உண்மையில் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.