41 ஆண்டு காத்திருப்புக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.
வெண்கல பதக்கத்திற்க்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா எதிர்கொண்டது. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இப்போட்டியில் இரு அணியும் 3-3 என்ற கோல் கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தது.
2ஆம் பாதியின் துவக்கத்திலேயே விரு விருவென இரண்டு கோல்கள் அடித்து இந்திய முன்னிலை பெற்றது. பின்னர் ஜெர்மனி ஒரு கோல் அடிக்க ஆட்டம் 4-5 என்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியது.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்ததும் அதை இந்தியாவின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் கோலாக மாத்த விடவில்லை. இறுதியாக 5-4 என்ற கணக்கில் இந்தியா தனது 41 ஆண்டு கனவை நினைவைகியுள்ளது.
ஆடுகளம் முழுவது ஆனந்த கண்ணீரும், அதிருப்தி கண்ணீரும் நிரம்பியது.