தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே விராக்குளம் பகுதியில் உள்ள மேடை தளவாய் மாடசாமி கோயிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலர் கோவிலின் உட் பிரகார அறைக்கதவை உடைத்து பித்தளை விளக்கு, பூஜை சாமான்கள் உட்பட சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








