தமிழ்நாட்டின் பெண்கள் தங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.இந்தச் சூழலில் சினிமா, இலக்கியம் மற்றும் சமூகத்தால் வழிந்து ஊட்டப்பட்ட காதல் என்னும் உணர்வு இல் சிக்கிக்கொண்டு, தந்தைக்கும் காதலனுக்கும் நடுவில் முடிவெடுக்க தடுமாறும் இளம்பெண்கள், விடலைகள் இரு தரப்பாலும் கொலையுண்டு போகும் கொடூரம் நடக்கிறது.
மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவன், பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா ( 19) என்ற பெண்ணை காதலித்துள்ளான் . வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளான் . பெண் வீட்டார் பெண் தர மறுத்ததோடு, பெண்ணிற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்தவும் நிச்சயித்துள்ளனர்.

இந்நிலையில், ஆத்திரமுற்ற ஹரிஹரன் வீட்டில் தனியாக இருந்த அபர்ணாவை கழுத்தை எடுத்து கொலை செய்துவிட்டு, தப்பி சென்று விட்டான் .
இந்த சம்பவம் குறித்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில்,
சம்பவ இடத்திற்கு வந்த மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
