தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்துக்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 40 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். இன்று காலை அவர்களில் சிலர் அருகே இருந்த கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக 6 பேர் ஆற்றில் மூழ்கி மாயமானார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். இதில், தூத்துக்குடி சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்கள் சார்லஸ்(38), பிருத்திவிராஜ்(35), தாவித்ராஜ் (30) ஆகிய மூவரின் உடலை மீட்டனர். தெம்மைராஜ் மகன் ஈசாக், சுந்தரராஜ் மகன் பிரவின்ராஜ், செல்வராஜ் மகன் கெர்மஸ் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர். போலீசாரும் பொதுமக்களும் மீட்புப்பணியில் உதவி வருகின்றனர்.














