வைகை நீருக்கு மலர்தூவி வரவேற்பு

0
428

இந்தாண்டு வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உட்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் பெரும்பாலான நீர்த்தேக்கங்களில்  நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு மனு அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று வைகை அணையிலிருந்து மதுரை திண்டுக்கல்,  சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடபட்டது.

அந்த தண்ணீர கள்ளந்திரி மதகு பகுதிக்கு வந்தது. வைகை நீருக்கு மலர்தூவி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கள்ளந்திரிகால்வாயிலிருந்து பிரித்து அனுப்பபடும் மதகை மேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவள கண்ணன் மற்றும் உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் திறந்துவைத்தனர்.
இதன்மூலம் 20000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here