கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன் தாரணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட அவரது உடலை இறங்கிய போது மாணவியின் பெற்றோர் கதறி அழுது துடித்தனர். இது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் மூழ்க வைத்தது. முன்னதாக அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி , செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பொன் தாரணியின் உடல் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி வீட்டில் நடைபெற்ற பிறகு ஊர்வலமாக ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.













