சிவகாசி அருகே மாலையில் கடத்திச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் காலையில் பிணமாக மீட்பு

0
471

:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (45). இவரது மகன் முத்துக்குமார் (19). கல்லூரி மாணவரான முத்துக்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, சிவகாசியைச் சேர்ந்த பாண்டித்துரை, மாரி, ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் முத்துக்குமாரை சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். இது குறித்து வைரமுத்து, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

வழக்குபதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமாரை

தேடி வந்த நிலையில், விஸ்வநத்தம் அருகேயுள்ள தெற்கு ஆனைக்கூட்டம் பகுதியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் பார்த்தபோது சடலமாக கிடந்தது காணாமல் போன கல்லூரி மாணவர் முத்துக்குமார் என்பது தெரிய வந்தது.

முத்துக்குமார் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குறறவாளிகளையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here