மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில், ஆண்டியப்பமேடு செல்லும் பாதையில்,குட்டதட்டி மடையில் இருந்து உருவாகும் கால்வாய் சுமார் 6 அடி அகலம் உள்ளது. இந்த கால்வாயானது தற்போது, முற்றிலுமாக மணல்மேவி காணப்படுவதால் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் தரிசு நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது.
இதன் மூலம் விவசாயத்தை நம்பி உள்ள சுமார் 200 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இந்த கால்வாயை தூர்வாரி தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
.
இதுகுறித்து, கிராம காவல் தனம் என்பவர் கூறும் போது, ‘இந்த குட்ட தட்டி கால்வாய் மூலமே முல்லை பாசன கால்வாயில் இருந்து வரும் விவசாய நீர் தேனூர் கால்வாய் வரை சென்று சேர்கிறது. இந்த கால்வாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது . இதனை நம்பி சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன’என்றார்.